
தமிழ் புத்தாண்டு ஜாதகம் சூப்பரா இருக்காம்.."இதுவும் நடக்குமாம்"....!
2018ல் விளம்பி... நாளை தமிழ் புத்தாண்டு என்பதால், இந்த ஆண்டு எப்படி இருக்கும் என பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு மிகவும் சிறந்த நாளாக கருதுவார்கள்..அதுமட்டுமின்றி, இந்த தமிழ் புத்தாண்டில் எந்தெந்த மாற்றம் வரலாம்.
வதை எதிர்பார்க்கலாம்..? எது நடக்கும் எது நடக்காது..? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ....
இந்த விளம்பி 2018 வருடம்
அதாவது 2018 ஏப்ரல் தொடங்கி 2019 ஏப்ரல் 13ம் தேதி வரை...
தமிழகத்தில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கும்.
அதேசமயம் போதுமான அளவுக்கு மழை இருக்குமாம்...
ஆனால், மழையால் சேதங்களோ பாதகங்களோ ஏற்படாது....
முக்கியமாக, இந்த விளம்பி வருடத்தில், விவசாயம் செழிக்கும்.
பொருளாதாரம் ஏற்றம் பெறும். அதாவது பங்குச் சந்தை வர்த்தகம் உயரும் எல்லாவற்றையும் விட, முக்கியமான ஒன்று... தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும். ஸ்திரமான ஆட்சி நிர்வாகம் அமையும் என கணிக்கப்பட்டு உள்ளதாம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்?
ஆங்கில புத்தாண்டு வந்தாலும் சரி, தமிழ் புத்தாண்டு வந்தாலும் சரி தமிழகத்தில் எப்போது ஆட்சி மாற்றம் வரும் என பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது ..
இந்நிலையில், நாளை தமிழ் புத்தாண்டு என்பதால், இந்த தமிழ் புத்தாண்டு ஜாதகப்படி, ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் அடுத்து வரும் பதிவுகளில் எந்தெந்த ராசியினருக்கு எந்தெந்த பலன்கள் என்பதை பார்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.