உங்க  “வாட்ஸ் அப் “ ........உங்களுக்கே  ஆப்பு .....!!!

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
உங்க  “வாட்ஸ் அப் “ ........உங்களுக்கே  ஆப்பு .....!!!

சுருக்கம்

உங்க  “வாட்ஸ் அப் “ ........உங்களுக்கே  ஆப்பு .....!!!

சொந்த காசில்  சூன்யம் வைத்துகொள்ள வேண்டாம்....!!! வாட்ஸ் அப்பால் வருகிறது  ஆப்பு...!!!

 இன்றைய   காலக்கட்டத்துல  வாட்ஸ்  ஆப்  பயன்படுத்தாதவர்கள்  எவரும்  இல்லை.   இந்த வாட்ஸ் அப் மூலம்  அதிகம் பயன் பெறுகிறோம். அதாவது சரியான முறையில்  பயன்படுத்தினால் அனைவருக்கும்  உபயோகமாக தான் இருக்கிறது.

 ஆனால் ஒரு சிலர்,  தேவை இல்லாத வதந்திகளையும் , பொய்யான  தகவலையும்,   கலவரத்தை  தூண்டும் வகையில்  பல  தேவை இல்லாத  பதிவுகளையும்  பதிவிட்டு  வருகின்றனர்.

இது போன்ற  தகவல்   மிக விரைவில்  அனைவருக்கும்  பார்வார்ட்  செய்யப்பட்டு வருகிறது.  

இதனால், தேச பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கருத்தை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை   எடுக்க உள்துறை  அமைச்சகம்  முடிவெடுத்துள்ளது.

இதனால் தேவையற்ற பீதியை பொதுமக்கள் சந்திக்க நேரிடுவதோடு, அரசு நிர்வாகத்திற்கும் கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை கண்காணிக்க, உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்  அப் அட்மினுக்கும்  வருகிறது  பிரச்னை ...!!!

வாட்ஸ் ஆப்  குரூப்பில் இருப்பவர்கள்,  தேவை இல்லாத  வதந்திகளை  குரூப்பில் பதிவிட்டால் , அதற்கு  குரூப்  அட்மின்  பொறுபேற்க  வேண்டும். அதற்குண்டான  தண்டனை குரூப்  அட்மின் அடைவார்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது...

வீண்  வதந்திகளை  யார்   பரப்பினாலும்,   சட்டப்படி    நடவடிக்கை  எடுக்கப்படும் என  உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்