தி.நகர் "ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு" வந்த சோதனை...! இழுத்து மூடப்பட்ட கடைகள் .!

By ezhil mozhiFirst Published Mar 19, 2020, 1:17 PM IST
Highlights

எங்கு பார்த்தாலும், எப்படி பார்த்தாலும் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வெளி ஊரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கூட டி நகருக்கு சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சென்றால் தான் ஒரு விதமான மன நிம்மதி ஏற்படும். 

தி.நகர் "ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு" வந்த சோதனை...! இழுத்து மூடப்பட்ட கடைகள் .!

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை கொரோனா எதிரொலியால் முடங்கி கிடக்கிறது. தெருக்கள் எங்கும் காலியாக வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் வெகு குறைவாகவே இருக்கின்றது. காரணம்... பள்ளிகளுக்கு விடுமுறை, சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊழியர்களை அனுமதித்து இருப்பது... மேலும் கொரோனா அச்சத்தால் பொதுமக்களும் வெளியில் வராமல் இருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒரு நிலையில் சென்னையில் மிக அதிகமாக கூடும் இடம் என்றால் ஒரு சிலவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் தி நகரும் ஒன்று. இங்கு எங்கு பார்த்தாலும், எப்படி பார்த்தாலும் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வெளி ஊரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கூட டி நகருக்கு சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சென்றால் தான் ஒரு விதமான மன நிம்மதி ஏற்படும். அப்படிப்பட்ட தி  நகரில் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைவது என்பது அவ்வளவு ஈஸியான ஒரு விஷயம் அல்ல. மக்கள் கூட்டம் அவ்வளவு அலைமோத கூடிய ஒரு இடம் ரங்கநாதன் தெரு 

காரணம் அத்தனை வணிக வளாகங்கள், அழகாக தொங்க விடப்பட்டுள்ள ஆடைகள், விதவிதமான அழகுப்பொருட்கள், ரங்கநாதன் தெருவுக்கு நுழைந்தால் நமக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். அத்தனையும் அங்கே கிடைத்துவிடும். இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த தி.நகரில் கொரோனா எதிரொலியால் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

தற்போது வெறிச்சோடிக் கிடக்கும் சாலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி அவர்களுக்கு பிடித்த விளையாட்டான கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் இது என்னடா தி.நகர் "ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு" வந்த சோதனை என கருத்து தெரிவிக்கின்றனர் 

click me!