வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய "சூப்பர் டிப்ஸ்"...!

By ezhil mozhiFirst Published Mar 26, 2020, 3:49 PM IST
Highlights

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு என்றுமே வேலை தான்.... ஆனால் ஊரடங்கு காரணமாக   விடுமுறை கிடைக்கவில்லையே... ஓய்வு  எடுக்க கூட நேரமில்லையே என இருந்தவர்களுக்கு இந்த ஒரு நேரம் வரப்பிரசாதம் தான் எனவே இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் 

வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய "சூப்பர் டிப்ஸ்"...! 

21 நாட்கள் தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு  கொரோனா பாதிப்பில் சிக்காமல் உள்ளனர். ஆனாலும் மற்றொரு பக்கம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ஒரு நிலையில் வீட்டிலேயே இருப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என அவரவருக்கு மட்டுமே தெரியும்.

அதாவது வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு என்றுமே வேலை தான்.... ஆனால் ஊரடங்கு காரணமாக  விடுமுறை கிடைக்கவில்லையே... ஓய்வு  எடுக்க கூட நேரமில்லையே என இருந்தவர்களுக்கு இந்த ஒரு நேரம் வரப்பிரசாதம் தான் எனவே இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் 

இது குறித்து மனநல மருத்துவர் ஒருவர் தெரிவிக்கும் ஐடியாவை பாருங்கள்..

"வீட்டிலிருக்கும் போதும் கூட, உடன் இருப்பவர்களோடு பேசாமல் செல்பேசியிலேயே காலம் கழித்தவர்களுக்குக் கூட இந்த மூன்று வார முடக்கம் அவ்வளவு சுலபமாக இருக்காது.

இந்த மூன்று வாரத்தில் நாம் பயனுள்ள சுவையான வகைகளில் நம் நேரத்தைச் செலவிடலாம் என்பதே எல்லார்க்கும் முதலில் தோன்றும். முதல் வாரம் படம் பார்த்து, படித்து புதியாய் ஏதாவது வீட்டிலிருந்தபடியே செய்வது என்பது ஓரளவுக்குச் சரியாகப் போய்விடும்.

இரண்டாம் வாரம் கொஞ்சம் சலிப்பும் எரிச்சலும் வரும். வீட்டுக்குள்ளேயே ஒருவரையொருவர் குற்றம் காண்பது அதிகரிக்கும். வெளியே போக ஏக்கமும் பரபரப்பும் வரும். இதையும் தாங்கிக் கொள்ளலாம்.

மூன்றாவது வாரத்தில் தளர்வும் சோர்வும் வரும்.

ஏதும் செய்ய மனத்தில் ஈடுபாடு வராது. 

பிடித்த காரியங்கள் என்று நாம் நினைத்த படம் பார்ப்பது, இசை கேட்பது கூட அவ்வளவாகச் செய்யத் தோன்றாது.

இது depression மனச்சோர்வின் அறிகுறி என்றாலும் இதற்கு உடனடியாய் மனநல மருத்துவ உதவி தேவைப்படாது. ஆனால், இப்போதைய முடக்கம், இன்றைய உலக நிலவரத்தை நோக்கினால், நான்கு வாரங்களோ ஆறு வாரங்களோ நீடிக்கலாம் என்பதால், மனம் சோர்வடையாமல் இருக்க தினசரிக்கு ஓர் அட்டவணை அவசியம். 

பிடித்த காரியங்களை முதல் வாரத்திலேயே முழுமூச்சாய் இடைவிடாமல் செய்து சலிப்பதை விட தினமும் இந்த நேரம் படிக்க, இந்த நேரம் படம் பார்க்க என்று ஒதுக்கிக் கொண்டால் நான்கு வாரங்களைக் கடப்பது கடினம் என்றாலும் சாத்தியம்.

மிக மிக முக்கியமாக கொரோனா குறித்த செய்திகளையும் பொய்களையும் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து விட்டு அதற்கென்று கொஞ்ச நேரம் மட்டும் ஒதுக்குவது மனநலத்திற்கு உதவும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார். எனவே நம் நேரத்தை வீட்டில் இருந்தபடியே எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை திட்டமிட்டு பயன்படுத்துங்கள் 

click me!