
சன் கிளாஸ், கண்ணுக்கு நல்லதோ இல்லையோ , சும்மா ஸ்டைலா இருந்தாலே போதும் , நமக்கு பிடித்த கலரில் தேர்வு செய்து ஸ்டைலா போட்டுக்கொள்வது வழக்கம் . ஆனால் இது மாதிரியான சன் கிளாஸ் எந்த அளவுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்பது நம்மில் யாருக்காவது தெரியுமா ?
தரமற்ற கண்ணாடிகளில் பூசப்பட்டிருக்கும் கோட்டிங் மற்றும் வண்ணப்பூச்சு , வெயிலில் செல்லும் போது மெதுவாக உருக ஆரம்பிக்கும், அது நமக்கே தெரியாமல், சருமத்தில் படுவதால், தோல் நோய் ஏற்பட வாய்ப்புண்டு . அதுமட்டுமில்லாமல்,
இது போன்ற தரமற்ற கண்ணாடியை பயன்படுத்துவதால், நம் கண்களுக்கு அதிகள் அழுத்தம் தர வேண்டி இருக்கும் , மேலும் கண்ணுக்கு அழுத்தம் தரப்பட்டு காலப்போக்கில், தலைவலை கண்ணீரில் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
விலை குறைவாகவும் , பல வண்ணங்களிலும் கிடைப்பதால் நம்மில் பலரும் கண்மூடித்தனமாக தரமற்ற கண் கண்ணாடியை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.