Sukanya Samriddhi Yojana : சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. இத்திட்டம் பெண் குழந்தைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. சுகன்யா சம்ரித்தி யோஜனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பின்வரும் இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
எப்படி கணக்கை திறப்பது?
உங்கள் பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை நீங்கள் அந்த குழந்தையின் பெயரிலேயே இந்த கணக்கை துவங்க முடியும்.
ஒரு பெண் குழந்தையின் பெயரில் எத்தனை சுகன்யா சம்ரித்தி யோஜனா: கணக்கு திறக்கலாம்?
ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
ஏசி, ஃபேன் இரண்டையும் ஒரே நேரத்தில் யூஸ் பண்ணலாமா..? அதனால் என்ன ஆகும்.?
சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை எங்கே திறப்பது?
உங்கள் வீட்டின் அருகே உள்ள தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் கணக்கு தொடங்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கு தேவையான ஆவணம் என்ன?
யாருடைய பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதோ அந்த பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் குறைந்தபட்ச எவ்வளவு தொகை செலுத்தலாம்?
கணக்கு துவங்கும்போது குறைந்த பட்சம் 250 ரூபாய் செலுத்தி சேரலாம், மற்றும் அதன் பிறகு குறைந்தபட்சம் 100 டெபாசிட். குறைந்தபட்சம் ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் அதிகபட்சம் எவ்வளவு தொகை செலுத்தலாம்?
அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் 1,50,000 வரை டெபாசிட் செய்யலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம்?
அவ்வப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வட்டி விகிதங்கள் வருடாந்திர கூட்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த ஜனவரி-மார்ச் 2019 நிலவரப்படி இது 8.5% ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் செலுத்திய பணத்தை எப்போது எடுக்கலாம்?
கணக்கு வைத்திருப்பவரின் 18 வயதை எட்டியதும், முந்தைய நிதியாண்டின் கிரெடிட்டில் 50% நிலுவைத் தொகையில் கல்விச் செலவுகளைச் எடுக்க அனுமதிக்கப்படும். அதே போல இந்த கணக்கை வேறு வாங்கி அல்லது தபால் நிலையத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா எப்போது முதிர்ச்சி அடையும்?
கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் திருமணம் நடக்கவுள்ள நேரத்தில் அது முதிர்ச்சியடையும்.
பெண்களின் Handbag-ல் கண்டிப்பாக இருக்க வேண்டியவை இவையே..! மறக்காதீங்க..!!