சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் நியூஸ்….மிகக் குறைந்த விலையில் மருந்து !!

By Selvanayagam PFirst Published Dec 11, 2019, 8:51 PM IST
Highlights

சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மருந்தின் விலை கூடிய விரைவில் குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சர்க்கரை நோயாளிகள் மாத்திரையாக பயன்படுத்தும் Vildagliptin என்ற மருந்தை சுவிஸ் நாட்டின் NOVARTIS என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்துக்கு அந்த நாடு மட்டுமே பேட்டர்ன் ரைட் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மருந்துக்கான இந்நிறுவனத்தின் காப்புரிமை காலம் நேற்றோடு நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மருந்து தயாரிப்பில் இருக்கும் 15 முதல் 20 நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்து பாதி விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

ஒரு Vildagliptin மருந்து 20 முதல் 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் இந்த மருந்தை 5 முதல் 6 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான சிப்லா, சைடஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்தின் தயாரிப்பை தொடங்க உள்ளன. அதே நேரத்தில் இந்த நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகளின் ஒரு நாளைய மருந்துக்கான செலவு 10 ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!