அதிர்ச்சி வீடியோ ..! பெங்களூரு விழாவில் சொல்ல சொல்ல அடங்காத மாணவி.. என்ன பேசுகிறார் பாருங்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 21, 2020, 12:50 PM IST
அதிர்ச்சி வீடியோ ..! பெங்களூரு விழாவில் சொல்ல சொல்ல அடங்காத மாணவி.. என்ன  பேசுகிறார் பாருங்கள்..!

சுருக்கம்

குடியுரிமை திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில், பெண்பிள்ளை என்றும்  பாராமல் மனதளவில் தூண்டுதல் ஏற்படுத்தி அவரை இவ்வாறு பேச வைத்துள்ளதாக அமுல்யாவின் பெற்றோர் வருந்துகின்றனர். 

அதிர்ச்சி வீடியோ ..! பெங்களூரு விழாவில் சொல்ல சொல்ல அடங்காத மாணவி.. என்ன  பேசுகிறார் பாருங்கள்..! 

பெங்களூருவில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற அமுல்யா என்ற பெண் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதன் காரணமாக அவர் மீது தேச விரோத வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி 14 நாள் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்போது கல்லூரி மாணவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளஅவருடைய தந்தை எனது மகள் அமுல்யா அப்படி சொல்லியது மிகவும் தவறு. சமீபகாலமாக இஸ்லாம் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதால் அவளை தவறாக வழிநடத்துகின்றனர் என தெரிவித்து உள்ளார். மேலும் தன்னுடைய பேச்சை கேட்பதும் கிடையாது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில், பெண்பிள்ளை என்றும்  பாராமல் மனதளவில் தூண்டுதல் ஏற்படுத்தி அவரை இவ்வாறு பேச வைத்துள்ளதாக அமுல்யாவின் பெற்றோர் வருந்துகின்றனர். இந்த பேரணியில் அகில இந்திய majlis-e-ittehadul முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்