"21 நாட்களில் மரண தண்டனை'...! செம்ம பவர்புல் IAS, IPS நியமனம் ..! இனி..பெண்களிடம் பாலியல் சீண்டலா..?

By ezhil mozhiFirst Published Jan 3, 2020, 7:06 PM IST
Highlights

சமீபத்தில் தெலுங்கான மாநிலத்தில் பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மக்கள் கொந்தளித்தனர்.

"21 நாட்களில் மரண தண்டனை'...!  செம்ம பவர்புல் IAS, IPS நியமனம் ..! இனி..பெண்களிடம் பாலியல் சீண்டலா..?

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற சம்பவங்களை விசாரித்து விரைந்து முடிக்க சிறப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து ஆந்திர அரசு அதிரடி காட்டியுள்ளது.சமீபத்தில் தெலுங்கான மாநிலத்தில் பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மக்கள் கொந்தளித்தனர்.

இது தொடர்பாக பிடிபட்ட 4 குற்றவாளிகளை விசாரணைக்காக அழைத்து சென்றபோது வழியில் தப்பிக்க முயன்றதால், 4 பேரும் விடியற்காலை 4 மணி அளவில் என்கவுண்டர் செய்து சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பிறகு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஆந்திர அரசு ஓர் அதிரடி முடிவை எடுத்தது.

அதன்படி "திஷா சட்டம் 2019". இதன்படி இந்திய தண்டனை சட்டப்படி 354F, 354G என இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றங்களை பதிவு செய்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை துன்புறுத்தினால் முதற்கட்டமாக அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க இந்த திஷாசட்டம் 2019 வழிவகுக்கிறது.

இதற்காக 1860 இல் ஓர் புதிய பிரிவு 354E சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அரசு வழக்கறிஞர்களும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளையும் நியமிக்க அரசு  முடிவு செய்துள்ளது. மேலும் பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களை துன்புறுத்துதல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வக்குகள், ஆசிட் தாக்குதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விரிவாக விரைவான விசாரணை நடத்தி தீர்வு காண மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க முடிவெடுத்துள்ளது ஆந்திர அரசு.

இந்த நிலையில் திஷா சட்டத்திற்கு பிறகு அனைத்து குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களிலேயே விரிவான விசாரணை நடத்தி மரண தண்டனை தண்டனை  வழங்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது 

"திஷா 2019" சட்டம் கொண்டுவந்த பிறகு, பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல இயக்குனராக பணியாற்றி வரும் டாக்டர் கிருத்திகா சுக்லாவிற்கு திஷா சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கர்னூலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிவந்த எம் தீபிகா ஐபிஎஸ் அவர்களை திரிஷா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு முழு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டத்தின்படி விரைவான விசாரணை 21 நாட்களுக்குள் நடத்தி மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொன்றாக அதிரடியாக செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஆந்திர மக்கள் மனதில் தோன்றியுள்ளது. திஷா சட்டம் 2019 ஆந்திர மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கு பாதுகாப்பாக இப்படி ஒரு சட்டத்தையும் விரைந்து கொண்டு வந்துள்ளதால் பெண்கள மத்தியில் மேலும் நற்பெயரை பெற்று உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. 

click me!