குடியரசு தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு கூகிள் டூடுல்......
இந்தியாவின் 68 ஆவது குடியரசு தினவிழா நாடெங்கும் வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகிள் , சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
குடியரசு தினம் :
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாகத்திற்கு வந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்நாள் தான் , குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில், இந்திய குடியரசு தினத்தையொட்டி , கூகிள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
சிறப்பு கூகிள் டூடுல்:
நேற்றிரவில் வெளியிடப்பட்ட இந்த டூடுல், ஒரு விளையாட்டு அரங்கத்தில், இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை குறிக்கும் வகையில் மக்கள் கூடியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.