பொங்கல் திருநாள் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது..!

By ezhil mozhiFirst Published Jan 2, 2020, 7:27 PM IST
Highlights

சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று சான்றுகளும் உண்டு.குறிப்பாக தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது.

பொங்கல் திருநாள் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது..! 

ஆங்கில புத்தாண்டு முடிந்த கையோடு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழ் மக்கள். 

பொங்கல் திருநாளை மதத்துடன் இணைக்காமல்  எல்லோரும் கொண்டாடும், நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதை நாம் உணர முடியும் .சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று சான்றுகளும் உண்டு.குறிப்பாக தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது.

புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.

இந்தப் பண்டிகை நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.

உழவிற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் 

மாட்டு பொங்கல்..! 

கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்.

காணும் பொங்கல் 

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று பார்த்து தங்கள்அன்பையும் உணவுப்பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் திருநாள் வர இன்னும் 10 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!