இனி பள்ளிகளில் கரும்பலகை பதிலாக "ஸ்மார்ட் பலகைகள்"..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Oct 2, 2019, 7:04 PM IST
Highlights

அமைச்சர் செங்கோட்டையன் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இனி பள்ளிகளில் கரும்பலகை பதிலாக "ஸ்மார்ட் பலகைகள்"..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் இலவச நீட் தேர்வு, பயிற்சி மையங்கள், ஆங்கில திறனை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து பேராசிரியர்களை வரவைப்பது, சீருடையில் மாற்றம், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில்கூட பின்லாந்து நாட்டிற்கு சென்று அங்குள்ள கல்விமுறையை  குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பள்ளிகளில் கரும்பலகை பதிலாக ஸ்மார்ட் பலகைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அடுத்த வார இறுதிக்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு வகுப்புகளுக்கு இன்டர்நெட் வசதி செய்து தரப்படும் என்றும், காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்து உள்ளது

click me!