26 ஆம் தேதி சூரிய கிரகணம்..! இந்த "5 நட்சத்திரகாரர்கள்" மறக்காமல் இதை செய்யுங்க ..!

By ezhil mozhiFirst Published Dec 24, 2019, 2:24 PM IST
Highlights

26ஆம் தேதியன்று மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சந்திரன் கேது குரு சனி புதன் சூரியன் முதலான 6 கிரகங்களின் சேர்க்கை ஒன்றாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

26 ஆம் தேதி சூரிய கிரகணம்..!  இந்த "5 நட்சத்திரகாரர்கள்" மறக்காமல் இதை செய்யுங்க ..!  

வரும் 26ஆம் தேதி சூரிய கிரகணம் நடக்க இருப்பதால் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரம் கொண்டவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

26ஆம் தேதியன்று மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சந்திரன் கேது குரு சனி புதன் சூரியன் முதலான 6 கிரகங்களின் சேர்க்கை ஒன்றாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக 23 ஆண்டுகளுக்கு பிறகு தென்தமிழகத்தில் பார்க்கக்கூடிய ஓர் நெருப்பு வளையம் என சொல்லும் அளவுக்கு முழு சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. 

இந்த சூரிய கிரகணமானது கேரளா முதல் தமிழகத்தில் குறிப்பாக 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும் என்றும் மற்ற இடங்களில் இருந்து பார்க்கும்போது ஓரளவுக்கு கிரகணத்தின் ஒரு பகுதியை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும் இன்னும் சொல்லப்போனால் நிலவின் நிழல் ஆனது பூமியின் மீது விழும் இதுதான் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதேபோன்று முழு சூரிய கிரகணம் என்றால் நிலவு முழுமையாக சூரியனை மறைக்கும் போது முழு சூரிய கிரகணம் என்று சொல்கிறோம்.

இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று முழு சூரிய கிரகணம் ஆனது காலை 8 மணி முதல் 11 மணி 16 நிமிடம் வரையில் 97.3 சதவீதம் நிலவு முழுமையாக சூரியனை மறைக்கும் நேரமாக உள்ளது. எனவே இந்த ஒரு தருணத்தில் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சந்திரன் கேது குரு சனி புதன் சூரியன் உள்ளிட்ட 6 கிரகங்களின் சேர்க்கை நடக்க இருப்பதால், ராகுவின் பார்வையில் இந்த ஆறு கிரகங்களும் நீள்வட்டப்பாதையில் இயங்க தொடங்கும். அப்போது இதன் தாக்கம் பூமியின் மீது விழும். இதனால் ஒருசில நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதாவது தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதில் குறிப்பாக பூராடம் மூலம் அஸ்வினி மகம் கேட்டை இந்த ஐந்து நட்சத்திர காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்து கொள்வது நல்லது

click me!