மன அழுத்தத்தை போக்க "சமூக இடைவெளி சினிமா தியேட்டர் ரெடி "..! தமிழகத்தில் முதல் முறையாக ..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 23, 2020, 05:03 PM IST
மன அழுத்தத்தை போக்க "சமூக இடைவெளி சினிமா தியேட்டர் ரெடி "..! தமிழகத்தில் முதல் முறையாக ..!

சுருக்கம்

கடந்த 40 நாடகளாகவே இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதால் ஏற்படும்மான அழுத்தத்தை  குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது.

மன அழுத்தத்தை போக்க "சமூக இடைவெளி தியேட்டர்"..! தமிழகத்தில் முதல் முறையாக ..! 

கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். எங்கும் வெளியில் செல்ல முடியாமலும், வேலைக்கு போக முடியாமலும் பொருளாதார  இழப்பை சந்தித்து வருகின்றனர். பலரும் வீட்டிற்குள்ளேயே தொடர்ந்து முடங்கி இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, சமூக இடைவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளது. அதாவது ஆதரவற்ற பலரும் தங்க இடம் இல்லாமல் உண்ண  உணவு  இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, சுமார் 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது . அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு  தேவையான அனைத்தும் வழங்கி வருகின்றனர் 

கடந்த 40 நாடகளாகவே இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதால் ஏற்படும்மான அழுத்தத்தை  குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. இந்த திரை அரங்கில் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளி ஏற்படுத்தப்பட்டு, அதற்கேற்றவாறு அவர்களை அமர வைத்து உள்ளனர். பின்னர் இவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் படம்  திரையிடப்பட்டது.

இதனை அனைவரும் ஒன்றாக இணைந்து சமூக  இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்த்து ரசித்தனர்.  நெல்லை மாநகராட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கை தமிழக மக்கள் மத்தியில் நெல்லை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்