போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த 6 ஆடி நீள பாம்பு..!! பல மணி நேரம் வித்தை காட்டிய வினோதம்...!!

By Asianet Tamil  |  First Published Sep 21, 2019, 7:27 PM IST

கேபிளில் பிணைந்தபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. இதைப்பார்க்க மக்கள் தங்கள் மீது பாம்பு விழுந்து விடுமோ என பயந்து அலறி அடித்து ஓடியவண்ணம் இருந்தனர் 


சென்னை மடிப்பாக்கத்தில்  கேபிளில் தொங்கியபடி பலமணி நேரம் வித்தைக்காட்டி வினோதம் செய்த பாம்பை பொதுமக்கள் அச்சத்துடன் ரசித்தனர். 

Tap to resize

Latest Videos

மடிப்பாக்கம்  பொன்னியம்மன் கோயில் தெரு சாலை  மக்கள் நடமாட்டம அதிகம் நிறைந்த பகுதியாகும் நேற்று மாலை மின்கம்பதுடன் கட்டப்பட்டிருந்த கேபிளில் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று, கேபிளில் பிணைந்தபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. இதைப்பார்க்க மக்கள் தங்கள் மீது பாம்பு விழுந்து விடுமோ என பயந்து அலறி அடித்து ஓடியவண்ணம் இருந்தனர் பலர் வேடிக்கை பார்த்தனர்  பலர் தங்களது போனில் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பிய வண்ணம் இருந்தனர் அங்குள்ள கடைக்கார்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் அரைமணி நேரம் வரை யாரும் அங்கு வரவில்லை இந்நிலையில் வித்தைகாட்டிய அந்த பாம்பு அருகில் இருந்த மரத்தின் கிளைவழியாக ஏறி மறைந்து விட்டது. இந்த பாம்பு காட்டிய வித்தையால் சாலையில் அரை மணிநேரம் பரபரப்பும்,  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...
 

click me!