சிங்கப்பூரின் உருமாற்றம் அடைந்த கொரோனா... குழந்தைகளை பாதுக்காக முதல்வர் வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published May 18, 2021, 6:39 PM IST
Highlights

குழந்தைகளுக்கு விரைவாக தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்

கடந்தாண்டு கொரோனா முதல் அலை பரவியது. முதல் அலையில் அதிகப்படியான முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா தடுப்பூசி வந்த பிறகு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. முதியவர்களில் பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி செலுத்தியதாலும், அவர்கள் வீட்டிலேலேயே இருப்பதாலும் தற்போதைய இரண்டாம் அலையால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பில்லை. ஆனால் இரண்டாம் அலையில் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இச்சூழலில் கொரோனா மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சிங்கப்பூரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகக் காரணமாக அமையலாம். ஆகவே சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு விரைவாக தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்”என வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

click me!