நீண்ட நேரத்திற்கு ஒரே முகக்கவசங்களை அணியும் போது வைரஸ் கிருமிகள் உங்கள் முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இதனால், உங்களுக்கு தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஒமைகிறான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கரோனா வைரஸ் டெல்டாக்ரான் என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது. இதற்கு, இரண்டு தடுப்பூசி போடுங்கள், முககவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள்போன்ற பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. கட்டாய முகக்கவசம் என்பது நடைமுறையில், இருப்பதால் பலர் தங்கள் முகக்கவசங்களை சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு சிலர் மூக்கிற்கு கீழே பேருக்கு முகக்கவசம் அணிகின்றனர். இன்னும், சிலர் முகக்கவசங்களை துவைக்காமல் அடிக்கடி அணிவதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.
undefined
முகக்கவசம் நமக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பளிக்கிறது. எந்த முகக்கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்? துவைக்காமல் அடிக்கடி அணிவதால், எது மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனபதை கீழே பார்க்கலாம்.
தோல் பிரச்சனை:
நீண்ட நேரத்திற்கு ஒரே முகக்கவசங்களை அணிவது ஒருவருக்கு தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோல் முகப்பரு:
மிகவும் பொதுவான தோல் நிலைகளில் ஒன்று "மாஸ்க்னே". அதாவது இது சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும் ஒரு தோல் முகப்பரு ஆகும். முகக்கவசம் அணிவதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் சருமம் அதிக வியர்வையை வெளிப்படுத்தும், அவை சரும துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.
நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம்:
ஒரே முகக்கவசத்தை அடிக்கடி நீண்ட நேரம் உபயோகிப்பது உங்கள் தொற்றுநோயை அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில், வைரஸ் உங்கள் முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயத்தில் முகக்கவசங்களை துவைக்காமல் போட்டுக்கொண்டால் அது தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
கருப்பு பூஞ்சை ஏற்படும் அபாயம்:
சுகாதாரமற்ற முகக்கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்றுக்கு பங்களிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது இன்னும் நிரூபணமாகவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
முகக்கவசங்களை தேர்வு செய்தல்:
உயர் தர முகக்கவசமான FFP3-யை அணிந்து கொண்டால் 100 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும். நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பிறகு அப்புறப்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களது தோல் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி முகக்கவசங்களை தேர்வு செய்யவும். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கொண்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்றாகவே சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்கை துவைக்காமல் மீண்டும் அணியக்கூடாது. அதனை நன்கு துவைத்து பயன்படுத்த வேண்டும் எனபதே இந்த செய்தியின் மையக்கருவாகும். எனவே, இனி வரும் காலங்களில் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கரோனாவை எதிர்கொள்ள துணிவோம்.