இனி... மோடி புகைப்படத்தை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்.. 6 மாதம் சிறை..! மத்திய அரசு அதிரடி...!

Published : Nov 13, 2019, 05:33 PM ISTUpdated : Nov 14, 2019, 04:03 PM IST
இனி... மோடி புகைப்படத்தை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்.. 6 மாதம் சிறை..! மத்திய அரசு அதிரடி...!

சுருக்கம்

பொதுவாக அசோக சக்கரம், பராளுமன்ற முத்திரை, சுப்ரீம்கோர்ட், தேசியக்கொடி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையோ அதன் சின்னங்களையும் தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

இனி பிரதமர் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்..6 மாதம் சிறை..! மத்திய அரசு அதிரடி...!  

இனி பிரதமர் ஜனாதிபதி புகைப்படங்களை அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனை யும் வழங்கப்படும் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுவாக அசோக சக்கரம், பராளுமன்ற முத்திரை, சுப்ரீம்கோர்ட், தேசியக்கொடி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையோ அதன் சின்னங்களையும் தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 1950 சட்டத்தின்படி இதுபோன்ற குற்றத்தை முதல்முறையாக செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் கூடுதலாக அபராதம் எதுவும் வசூலிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில் சில தனியார் வர்த்தக நிறுவனங்கள் சின்னங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து வந்தது. அதற்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நுகர்வோர் விவகார அமைச்சகம் திருத்தத்தை மேற்கொண்டு உள்ளது. ஒரு சில வர்த்தக நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தினர். பின்னர் அதற்காக மத்திய அரசிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தது. 

இப்படியான சூழ்நிலையில் பிரதமர் ஜனாதிபதி, சின்னங்கள்ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதத் தொகை புதிய சட்டத்தின்படி பல மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேசியக்கொடி, மகாத்மா காந்தி, பிரதமர் ஜனாதிபதி, பாராளுமன்றம், தர்மாசக்கரம், அசோகச் சக்கரம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உள்ளிட்டவற்றின் சின்னங்கள் மற்றும் பெயர்களை வர்த்தகம் தொடர்பாக அனுமதியின்றி விளம்பர படுத்தினால் இதுவரை ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் மீண்டும் அதே தவறை செய்யும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூபாய் 5 லட்சம் அபராத தொகையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் மிக விரைவில் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்