
மனைவி பணம் அனுப்பாததால் பெற்ற குழந்தையை துடி துடிக்க அடிக்கும் மனித மிருகம்...! திக் திக் வீடியோ..!
அரபு நாட்டில் பணிபுரியும் தன் மனைவி செலவுக்கு பணம் அனுப்பாததால் தன்னுடைய இரண்டு மகள்களையும் பெல்ட் கொண்டு அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்து அதனை மனைவிக்கு அனுப்பி வைத்துள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஈஷா. இவரது மனைவி பெயர் மகாலட்சுமி. தற்போது இவர் அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மாதம்தோறும் கணவன் பெயரில் பணம் அனுப்பி வந்துள்ளார் மஹாலட்சுமி. ஆனால் அந்த பணத்தை குழந்தைகளுக்காக சரிவர பயன்படுத்தாமல் ஊதாரித்தனமாக செலவு செய்து வந்துள்ளார் ஈஸா.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் பணம் அனுப்பாமல் இருந்துள்ளார் மகாலட்சுமி. இதனால் கோபமடைந்த ஈஸா தன்னுடன் இருந்த இரண்டு மகள்களையும் பெல்ட் கொண்டு அடித்து வீடியோ எடுத்து அதனை மனைவிக்கு அனுப்பியுள்ளார். பதற்றமடைந்த மகாலட்சுமி உடனடியாக ஆந்திராவில் உள்ள தன்னுடைய பெற்றோருக்கு விவரத்தை தெரிவித்து குழந்தைகளை மீட்க கெஞ்சி கேட்டு உள்ளார்.
பின்னர் மகாலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும் போது பணத்துக்காக பெற்ற குழந்தையை அடித்து துன்புறுத்தும் அளவிற்கு தான் மனித மிருகங்கள் இந்த சமூகத்தில் உலவி வருகிறது என்ற மனப்பான்மை அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.