வெங்காயத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு...! வேகமாய் பரவும் விழிப்புணர்வு புகைப்படம்..!

Published : Dec 04, 2019, 06:51 PM IST
வெங்காயத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு...! வேகமாய் பரவும் விழிப்புணர்வு புகைப்படம்..!

சுருக்கம்

நாளுக்கு நாள் வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், ஒரு கிலோ வெங்காயம் விலை ரூபாய் 200 தொடும் அவல நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.  

வெங்காயத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு...! வேகமாய் பரவும் விழிப்புணர்வு புகைப்படம்..!   

வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்  வெங்காயத்தை வெயிலில் வைத்து காய வைப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக  வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நாளுக்கு நாள் வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், ஒரு கிலோ வெங்காயம் விலை ரூபாய் 200 தொடும் அவல நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் தொடர் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி தற்போது பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூபாய் 100 லிருந்து 150 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூபாய் 140 இல் இருந்து 180 வரை விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் வட மாநிலங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் இறக்குமதி குறைந்து உள்ளதாகவும், இதன் காரணமாகவே தொடர் விலை ஏற்றம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்  வெங்காயத்தை வெயிலில் வைத்து காய வைப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து, டிக்டாக், திருமணத்தின் போது வெங்காயத்தை பரிசாக வழங்குவது, நகைக்கு பதிலாக வெங்காய மாலை அணிவது போன்ற வீடியோ காட்சிகளும் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்