"இதெல்லாம் சும்மா... பயம் காமிக்கிறாங்க.. அவ்வளவு தான்"...! விஜய்க்கு ஆதரவாக குமுறி தள்ளிய சீமான்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 06, 2020, 04:59 PM IST
"இதெல்லாம் சும்மா... பயம் காமிக்கிறாங்க.. அவ்வளவு தான்"...! விஜய்க்கு ஆதரவாக குமுறி தள்ளிய சீமான்..!

சுருக்கம்

மலேசியாவில் தை பூசத்திற்கு விடுமுறை அளிக்கின்றனர். தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும்... நடிகர் விஜயை விட பல மடங்கு அதிகம் சம்பளம் பெறும் நடிகர் யார் என அனைவருக்கும் தெரியும். 

இதெல்லாம் சும்மா..."பயம் காமிக்கிறாங்க.. அவ்வளவு தான்"...! விஜய்க்கு ஆதரவாக குமுறி தள்ளிய சீமான்..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பேசிய சீமான்  மலேசியாவில் தை பூசத்திற்கு விடுமுறை அளிப்பது போலவே தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசினார் 

அப்போது, "மலேசியாவில் தை பூசத்திற்கு விடுமுறை அளிக்கின்றனர். தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும்... நடிகர் விஜயை விட பல மடங்கு அதிகம் சம்பளம் பெறும் நடிகர் யார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் தம்பி விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்து ஒரு விதமான பயத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர் அவ்வளவு தான். ஆனால் ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து126 கோடி சம்பளம் வாங்குகிறார் ரஜினி. அவர் 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்பதையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டனர். என குறிப்பிட்டு பேசினார். 

அதன் பின்னர், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேசிய அவர், "பழங்குடி மக்கள் பதினோரு லட்சம் பேர் இருக்காங்க... நாடெங்கும் அதிக அளவில் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள்.. குறிப்பாக டெல்லியில் 13,000 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சன்னியாசி செல்பவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களிடம் சென்று ஆவணம் கேட்டால், அவர்கள் என்ன ஆவணம் கொடுப்பார்கள்? சன்னியாசியிடம் கோவணத்தை தாண்டி என்ன இருக்கிறது? இப்படி பல கேள்விகளை அடுக்கடுக்காகாக எழுப்பினார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!
Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்