சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுபவரா நீங்க? அப்படின்னா இதைப் படிங்க..!

 
Published : Dec 16, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுபவரா நீங்க? அப்படின்னா இதைப் படிங்க..!

சுருக்கம்

Saturn transit are you afraid of sani peyarchi then read it carefully

சனிப்பெயர்ச்சி பலன்களைப் படித்து விட்டு, பெயர்ச்சியை  நினைத்து, நினைத்து பயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படியுங்கள். 

தற்போது நடக்கக்கூடிய சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படாதீர்கள். முக்கியமாக ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் எதற்கும் அதிகம் பயப்படாதீர்கள். குறிப்பாக, எந்த ராசிபலனையும் பார்த்து பயப்படாதீர்கள்.

ராசி பலன்கள் என்று சொல்லப் படுபவை அனைத்துமே பொதுவானவைதான். அவை எல்லாருக்கும் அப்படியே பொருந்தாது. ஓரளவு மேலோட்டமாகவே பொருந்தும். அவை, உங்கள் உங்கள் ஜாதகப்படி மாறும்.

உங்கள் ஜாதகத்தில் லக்னம், தசா புத்தி, சனியின் சாரம், ஷட்பலம், அஷ்டவர்க்க பரல்கள் என எவ்வளவோ உள்ளன. பொதுவான பலன்களைப் படித்ததும், அடடா.. இப்படி எல்லாம் ஆகிவிடுமோ என்று நினைத்து நினைத்து, நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள்.

சனிப் பெயர்ச்சியால், உங்களுக்கு ஏற்படும் தீமைகளில் இருந்து தப்பிக்க இந்த வழிகளைக் கையாளுங்கள்...

உங்கள் கடமைகளை சரி வரச் செய்யுங்கள். 
முடிந்த வரை முயலுங்கள். 
சரியான நேரத்தைக் கடைபிடியுங்கள்.  சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள்.  
எதிர்மறைக் கருத்துக்களை விதைப்பவர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுங்கள். 
குல தெய்வத்தை வணங்குங்கள்.  
முன்னோர்களை தினமும் வணங்குங்கள். 

சனித் தொல்லை இனி இல்லை எனும் படிக்கு நீங்கள் சந்தோஷமாக காலத்தை ஓட்ட இந்தப் பரிகாரங்களே போதும்.

உங்கள் மீது நீங்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள்.

உங்களால் இந்த சனிப்பெயர்ச்சியை துன்பம் இல்லாமல் எதிர் கொள்ள முடியும் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள். எல்லாம் நன்மைக்கே!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்