
கேலக்ஸி நோட் 7 சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் சாம்சங் நிறுவனம், அதிலிருந்து மீண்டெழும் விதமாக கேலக்ஸி சி-9 ப்ரோ எனும் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ, 6 இன்ச் எச்.டி. தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது. கேலக்ஸி நோட் 7 மாடலில் உள்ளது போலவே 6ஜிபி ரேம் வசதியுடன் கேலக்ஸி சி-9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செல்ஃபி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் 16 எம்.பி. முன்பக்க மற்றும் பின்பக்க கேமிராக்கள் பிளாஷ் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் மார்ஷ்மெல்லோ 6.0 பதிப்புடன் இரண்டு சிம்கார்டுகளைப் பயன்படுத்தும் வசதியுடன் சி-9 ப்ரோ களமிறங்கவுள்ளது. இதன் நினைவுத்திறனை 64 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
இன்றைய இணைய பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ, 4,000மி.ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. ப்ளூடூத் 4.2 மற்றும் வைஃபை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கொண்ட சி-9 ப்ரோ சீனாவில் நவம்பர் 11 முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ மாடல் ஸ்மார்ட் போன்களின் விலை மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நாள் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.