உப்பு கம்மி பண்ணுங்க மக்களே......இல்லையென்றால் இதுதான் கதி......!!!

 
Published : Feb 11, 2017, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
உப்பு கம்மி பண்ணுங்க மக்களே......இல்லையென்றால் இதுதான் கதி......!!!

சுருக்கம்

“உப்பில்லா  பண்டம்  குப்பையிலே’  என்ற பழமொழி நாம் அனைவரும் கேட்டிருப்போம் . அதற்கேற்றவாறு  நம்மவர்கள் அதிக உப்பு போட்டு  உண்ண  தொடங்கிவிட்டனர். அதாவது உலகிலேயே  அதிக உப்பு பயன்படுத்தி  உண்ணும் பழக்கம் இந்தியர்களுக்கு அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

பாதிப்பு என்ன ? 

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட  நோய்களுக்கு  காரணம் அதிக உப்பு நம்மவர்கள்   எடுத்துக்கொள்வதே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நம் கண் முன்னே நம்மில் பல பேருக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு உள்ளது என்பதை பார்க்கமுடிகிறது

காரணம்:

கார சாரமான மசாலா மற்றும் உப்புச்சத்து நிறைந்த உணவுகளையே இந்தியர்கள் அதிகம் உண்பதும், ஊறுகாய், நொறுக்குத் தீனிகள் தொடங்கி, இறைச்சி வரை அனைத்திலுமே, இந்திய மக்கள் உப்பு, காரத்தை அதிகளவு சேர்த்துக்  கொள்வதுமே காரணம்  என கூறப்படுகிறது.

119 மடங்கு அதிகமான உப்பு :


பரிந்துரைக்கப்பட்ட அளவு உப்பை எடுத்துக்கொள்வதை விட ,119 மடங்கு அதிகமான உப்பு எடுத்துகொள்வதாக  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு எடுத்துக்கொள்ள  வேண்டும் ...!

தினமும், 2 கிராம் உப்பு மட்டுமே உணவில்  நாம் சேர்த்துக்  கொள்ள வேண்டும்.ஆனால்
இந்தியர்கள் மட்டும் இதில் விதிவிலக்காக, உப்பு நிறைந்த உணவையே அதிகம் விரும்பி சாப்பிடுவதால் இது போன்ற  பல  பிரச்சனைகளை  சந்திக்க  நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Armpit Acne : அக்குளில் வரும் குட்டிப் பருக்களை நீக்கும் சிம்பிளான வீட்டு வைத்திய குறிப்புகள்
Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்