
“ரெட் ஒயின் சாப்பிடு......ஆரோக்கியமா இரு”........சொல்கிறது ஆய்வு ..!!!
இதுதொடர்பாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னை , ரெட் ஒயின் சாப்பிடுவதால் , அதனை சரி செய்ய முடியும் என , அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு நடத்திய ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரெட் ஒயின் , திராட்சைப்பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி, இயல்பாகவும் உள்ளதாகக் தெரிவிக்கபட்டுள்ளது.
இயற்கையாகவே இந்த உணவு வகைகளில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுவதாகவும் , உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க இந்த பாலிஃபீனால் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.