நிம்மதி தரும் செய்தி... 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்த கொரோனா..!

By Thiraviaraj RMFirst Published Jul 28, 2020, 3:38 PM IST
Highlights

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்த நிலையில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 


மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்த நிலையில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதேபோல், நேற்றைய தினம் 8,776 பேருக்கு சோதனை செய்த நிலையில், 700 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியானது. இது கடந்த 100 நாட்களில் இல்லாத குறைந்த அளவிலான பாதிப்பு எண்ணிக்கை இது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 1,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நகரத்தில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 68 நாட்கள் வரை ஆகிறது. அதைபோல், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 73 சதவீதமாக உள்ளது. ஜூலை 20 முதல் 26ம் தேதி வரை மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.03 சதவீதம் கூடியுள்ளது.

மகாராஷ்டிராவில் திங்களன்று, 7,924 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 227 பேர் உயிரிழந்திருந்தனர். இதில், மும்பையில் மட்டும் 1,021 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 39 பேர் உயிரிழந்திருந்தனர். மும்பையில் இதுவரை மொத்தமாக 6,132 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மொத்தமாக 1,10,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்கத்து பகுதியான தானேவில், 34,471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனேவில் 48,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

click me!