
தமிழகத்தில் மழை..!
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் தேனி திண்டுக்கல் நீலகிரி கோவை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஆக 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. மழை பெய்யும் இடங்களைத் தவிர்த்து மழை பெய்யாத இடங்களான மற்ற மாவட்டங்களில் வெயில் சற்று அதிகமாகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 சென்டி மீட்டர் மழையும், நாமக்கல்லில் 3 சென்டி மீட்டர் மழையும், உதகையில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.