மழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எது தெரியுமா ..?

By ezhil mozhiFirst Published Jun 29, 2019, 7:22 PM IST
Highlights

வடக்கு ஆந்வருவதால் வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி திரா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எது தெரியுமா ..? 

வடக்கு ஆந்வருவதால் வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி திரா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரப்பதம் மிகுந்த காற்று உருவாகும்.

இதன் தாக்கத்தால் தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி கோவை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் ஓரளவிற்கு நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நேற்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், நீலகிரி மற்றும் காட்பாடியில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

click me!