
கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தில் கடும் வெளியில் நிலவி வந்தது. அதில் குறிப்பாக காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதே காரணம் என்றும், சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும், அதிலும் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதற்க்கிடையில் குமரி கடல், அதனை ஒட்டி உள்ள பகுதி மற்றும் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் படி தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே, மழைக்கான வாய்ப்பு என்ற செய்தி மக்களை மகிழ்வித்து உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.