குட் நியூஸ் மக்களே..! தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை..! இத்தனை மாவட்டத்திலும் வெளுத்து வாங்க போதாம்..! வெதர்மேன் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Apr 15, 2019, 1:45 PM IST
Highlights

தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்க உள்ளது என பிரபல தனியார் வானிலை ஆர்வலரான வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்க உள்ளது என பிரபல தனியார் வானிலை ஆர்வலரான வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, "உள்மாவட்டங்களில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடற்கரையிலிருந்து தள்ளி உள்ள ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார். சென்னையை பொருத்தவரையில் தற்போது இருக்கும் அதே வெப்பநிலை அதாவது 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நீடிக்குமாம்.

வட மாவட்டங்களான தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதே வேளையில் தொடர்ந்து மழை எதிர்பார்க்க முடியாது, ஆனால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தொடர்ந்து இந்த பகுதிகளில் 2 முதல் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும், கோடை காலத்தில் ஏற்படக்கூடிய இந்த மழைக்கு காரணம் மேற்கிலுள்ள காற்றும், கிழக்கில் உள்ள காற்றும்  மோதிக்கொள்வதும், இந்திய பெருங்கடல் பகுதியில் பூமியில் இருந்து வரக்கூடிய காற்றும் ஒன்று சேர்வதே என தெரிவித்து உள்ளார்.

அடுத்து வரும் இரண்டு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த தருணத்தில் கோடை காலத்திற்கான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என பிரதீப்ஜான் தெரிவித்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!