ஜூலை 2 வரை வெளுத்து வாங்க உள்ளது மழை..! இவ்வளவு மழை பெய்ததா..?

By ezhil mozhiFirst Published Jun 29, 2019, 1:52 PM IST
Highlights

மகாராஷ்டிர மாநில நேற்று பெய்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பெரும் அவதிக்குள்ளாகி இருந்த மக்கள் தற்போது குடிநீர் இல்லாமலும் பெரும்பாடு பட்டு வந்தனர்.
 

மகாராஷ்டிர மாநில நேற்று பெய்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பெரும் அவதிக்குள்ளாகி இருந்த மக்கள் தற்போது குடிநீர் இல்லாமலும் பெரும்பாடு பட்டு வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் பெய்யக் கூடிய மழை அளவை விட இந்த ஆண்டு குறைவாகத்தான் மழை பெய்தது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், தமிழகம், உத்தர பிரதேசம்என பல்வேறு மாநிலங்களில் கடுமையான தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது.அதேவேளையில் கோடை காலம் என்பதால் தண்ணீர் வரண்டு பல ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாத நிலை காணப்பட்டது. இதனால் குடிநீர் பிரச்சினை கிளம்பியது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தாமதம் ஆனதால், எதிர்பார்த்த நேரத்தில் மழை பெய்யாமல் போனது.தற்போது தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியதால் நேற்று மும்பையில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த இந்த மழை மாலை வரை நீடித்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளித்தது. இதனால் போக்குவரத்து பாதித்தது.தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து பாதித்தது. இருந்தபோதிலும் இந்த மழை, தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து சற்று  காப்பாற்றி உள்ளது என்றே சொல்லலாம். 

click me!