
உடனே இந்த இடத்துக்கு செல்லுங்கள்..! இன்று நேர்காணல்..! அஞ்சல் காப்பீட்டில் வேலை..!
தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு முகவர் களை நியமனம் செய்வதற்கான நேர்காணல் இன்று காலை தொடங்கியது. தபால் துறை சார்பில் எடுத்துக்கொள்ளப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்ய காப்பீட்டு நேரடி முகவர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கான நேர்காணல் 29ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள ராஜாஜி சாலையில் GPO தபால் நிலையத்தில் நடைபெறுகிறது.இந்த நேர்காணலில் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம். வயதுவரம்பு 18 முதல் 65 வரை. குறிப்பு: மத்திய மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கூட கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும்போது படிப்பு மற்றும் வயது உள்ளிட்டவைகளுக்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படும் முகவர்கள் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இன்சென்டிவ் அதாவது கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளது. எனவே தேவைப்படுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.