பெற்றோர்கள் உறங்கியவுடன் PUBG கேமை பைத்தியமாக விளையாடும் இளசுகள்..! அதிர்ச்சி பின்னணியம் எச்சரிக்கை மணியும்..!

By thenmozhi gFirst Published Jan 11, 2019, 7:02 PM IST
Highlights

தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வீடியோ கேம் பப்ஜி. முன்பு ஒரு காலத்தில் நம் வீட்டு குழந்தைகள் சிறிய சிறிய சொப்புக்களை வைத்தும், ஓடிப் பிடித்து விளையாடுவதும், ஒளிந்துகொண்டு விளையாடுவதுமாக இருந்தனர்.

பெற்றோர்கள் உறங்கியவுடன் PUBG கேமை பைத்தியமாக விளையாடும் இளசுகள்..! அதிர்ச்சி பின்னணியம் எச்சரிக்கை மணியும்..! 

தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வீடியோ கேம் பப்ஜி. முன்பு ஒரு காலத்தில் நம் வீட்டு குழந்தைகள் சிறிய சிறிய சொப்புக்களை வைத்தும், ஓடிப் பிடித்து விளையாடுவதும்,ஒளிந்துகொண்டு விளையாடுவதுமாக இருந்தனர்.

ஆனால் விஞ்ஞானம் வளர வளர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று ஆன்லைனில் பெருகி வருகிறது பல கேம்ஸ். வெளிநாடுகளில் எல்லாம் எதற்கெல்லாம் இன்டர்நெட்டை பயன்படுத்த வேண்டும் என்ற கல்வி அறிவு படிக்கும்போதே பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆணித்தரமாக புரிய வைக்கிறார்கள். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிலுள்ள சாதக பாதகங்களை உணர்ந்து ஒரு கட்டுப்பாட்டோடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டில் மோகம் செலுத்துகிறார்கள்.

ஆனால் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், மழலை முதல் வாலிபர் வரையிலும் அனைவருமே தாங்கள் பயன்படுத்தும் போனில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இன்று பிறக்கும் குழந்தை கூட தங்களது பெற்றோர்கள் பயன்படுத்தும் போனின் செயல்பாட்டை தினமும் பார்த்து பார்த்து அந்த ஒரு வாழ்க்கைக்கே மாறிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் போன் இல்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வாட்சப்,பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக தங்களின் நேரத்தை வீணடித்து வருகிறார்கள்.

அதேவேளையில் ஒரு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அதற்காக மட்டும் பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் அவ்வப்போது தலை காண்பிக்கும் விதமாக புதுப்புது வீடியோ கேம்ஸ் இன்றைய வாலிபர்களின் மனதை மாற்றிவிடுகிறது. அந்த வீடியோ கேம்ஸ் விளையாட மற்ற அனைத்தையும் மறந்துவிட்டு அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.

அதில் குறிப்பாக தற்போது ஆன்லைன் வீடியோ கேமான பப்ஜி, வாலிபர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. அதில் தனி ஒருவராய் அல்லது இருவர் சேர்ந்து அல்லது நான்கு பேர் சேர்ந்து என மற்றவர்களை தாக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி.

இந்த கேமில் மொத்தம் நூறு பேர் இருப்பார்கள். உதாரணத்திற்கு நான்கு பேராக சேர்ந்து கொண்டால், மீதமுள்ள 96 பேரை தாக்க வேண்டும். இந்த நான்கு பேர் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைன்  மூலமாக இணைந்து கொள்கிறார்கள். ஆள் தெரியாத முகம் தெரியாத நபர்களுடன்  உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒன்று சேர்ந்து இந்த கேம்ஸ் விளையாட ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு விளையாடி எதிரிகளை வீழ்த்தினால், கடைசியில் ஒரு சிக்கன் கிடைக்கும் அவ்வளவுதான். அதாவது இமேஜ்ல தான் சிக்கன்.உண்மையான சிக்கன் அல்ல.

ஆனாலும் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம்  உள்ளதாகவும், இதனை விளையாடும் போது உண்மையிலேயே மற்றவர்களை தாக்கக்கூடிய அளவிற்கு சிந்தனை இருப்பதாகவும் விளையாட்டில் ஊன்றி இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விளையாட்டை விளையாட குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவை. ஒருமுறை தோற்றுவிட்டால் அப்படியே விடுவதில்லை. அதன் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக மீண்டும் விளையாட தொடங்குவார்கள். இவ்வாறாக இரவு தொடங்கி விடிய விடிய மறுநாள் காலை 4 மணி 5 மணி வரை இரவு முழுக்க விளையாடும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றார்கள்.

நம் வீட்டில் உள்ள நபர்களே நம் பிள்ளைகள் எப்போது உறங்குகிறார்கள் என்பதை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். நாம் நல்ல உறக்கத்தில் இருக்கும் போது நமக்கே தெரியாமல் அவர்கள் போனை பார்த்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒருவரிடம் பேசிக் கொண்டே... ஓடி வா.. அப்படி செல்... அவனை அடி... இப்படி ஓடு... இவ்வாறாக பேசிக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டு எப்போது ஒழிக்கப்படுகிறதோ அப்போதுதான் ஒரு விடுதலை கிடைக்கும் என்றே கூறலாம்.

இதனை எல்லாம் ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே கவனித்து தன் பிள்ளைகள் தங்கள் கண் முன்னே உறக்கம் இல்லாமல், வேறு எந்த வேளையிலும் நாட்டம் இல்லாமல் கேம் விளையாடுவதில் மட்டுமே  தங்களின் முழு சிந்தனையையும் செலுத்துவதை பார்த்து மனதளவில் நொந்து விடுகின்றனர்.

tags
click me!