பெண்களே..! சுகப்பிரசவம் நடக்க கர்ப்ப காலத்தில்இதை மட்டும் செய்யுங்க...!

By ezhil mozhiFirst Published Nov 23, 2019, 4:01 PM IST
Highlights

மாறிவரும் கலாச்சாரம், கலப்பட உணவு வாழ்க்கை முறையில் எதிர்பாராத அளவுக்கு மாற்றம், உடல் உழைப்பு இல்லாத வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்றைய பெண்களின்  வாழ்க்கையில் சுகப்பிரசவம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை....
 

மாறிவரும் கலாச்சாரம், கலப்பட உணவு வாழ்க்கை முறையில் எதிர்பாராத அளவுக்கு மாற்றம், உடல் உழைப்பு இல்லாத வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்றைய பெண்களின்  வாழ்க்கையில் சுகப்பிரசவம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை....
 
ஆனால் சுகப்பிரசவத்திற்கு ஏன் தயங்குகின்றனர்? எதற்காக இந்த பயம்? சுகபிரசவத்திற்கு பெண்களின் உடல் ஒத்துழைக்காதது ஏன் என நினைத்து பார்க்கிறோமா? இல்லை.. அல்லவா? ஆனால் சுகப்பிரசவத்திற்கு அனைத்துவிதமான வாய்ப்புகள் இருந்தும் அதனை நாம் தடுத்து விடுகிறோம் என்பதை உணரவேண்டும். இனியாவது அப்படி இல்லாமல் எந்த விஷயத்தில் மாற்றம் வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருத்தரித்த பெண்களுக்கு சுகப்பிரசவம் என்றால் என்ன? சிசேரியன் என்றால் என்ன? என்பதை முழுமையாக விளக்க வேண்டும். சுகப்பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மீண்டும் உயிர் பிழைப்பது போன்ற ஒரு தருணம்... இன்பமான மறக்கமுடியாத ஒரு நிகழ்வு... ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பே இல்லாமல் சோம்பலாக வாழும் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம், பிரசவ வேதனை குறித்து பெரும் அச்சம்... இதன் காரணமாகத்தான் நாளுக்கு நாள் சிசேரியன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கருத்தரித்த பெண், அப்போதிலிருந்தே உடல் வலிமையும் மனவலிமையும் பெற்றிருத்தல் வேண்டும். சுகப்பிரசவத்திற்கான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தின் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகள் செய்வது மிக மிக முக்கியம். அந்த காலகட்டத்தில் வீட்டிலுள்ள பெண்கள் அவர்களுடைய கர்ப்பகாலத்தில் குனிந்து எழுந்து வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள பெருக்குவதும் கூட்டுவது மாக இருப்பார்கள். வாஷிங் மெஷின் என்ற ஒன்று இருக்காது... அவர்களே துணியை துவைப்பார்கள். வேலை அதிகமாக இருக்கும்... இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான உடற்பயிற்சி அவர்கள் செய்யும் வேலையிலேயே கிடைத்துவிட்டது.

கர்ப்ப காலத்தில் பொதுவாக ஒரு சில தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு போன்றவை அவர்களுக்கு வராமலே இருந்தது. ஆனால் இப்போது அனைத்தும் மிஷின் செய்து விடுகிறது. எனவே நமக்கு உடல் உழைப்புக்கான வேலையே இல்லை. உடற்பயிற்சி செய்வதும் கிடையாது. எனவே தேவையான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.அதேபோன்று சிசேரியன் பற்றிய அச்சத்தை மனதில் இருந்து தூக்கி எறியவேண்டும்.

வலியை தாங்க முடியாமல் முதல் குழந்தை சிசேரியன் மூலம் பெற்றுக் கொண்டால், இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரி ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தாலும் கூட சிசேரியன் மூலமாகத்தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும். காரணம் சிசேரியன் செய்து கொண்டால் செங்குத்தான முறையில் வயிற்றில் தையல் போட்டு இருப்பார்கள். இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் போது, நார்மல் டெலிவரி முயற்சி செய்தால் ஏற்கனவே தையல் போடப்பட்ட இடத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதற்காக மீண்டும் சிசேரியன் செய்ய கூடிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து முதல் பிரசவத்திலேயே சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாலே போதுமானது என்பதை நாம் உணர வேண்டும்.

click me!