உடல் எடை குறைக்க இப்படி ஒரு முடிவு வேண்டாம் மக்களே...! இந்த விபரீதத்தை நீங்களே தெரிஞ்சிக்கோங்க...!

Published : Nov 23, 2019, 02:20 PM ISTUpdated : Nov 23, 2019, 03:54 PM IST
உடல் எடை குறைக்க இப்படி ஒரு முடிவு வேண்டாம் மக்களே...! இந்த விபரீதத்தை நீங்களே தெரிஞ்சிக்கோங்க...!

சுருக்கம்

பிரிட்டனில், ஈஸ்ட்பெல்பாஸ்ட் பகுதியில் வசித்து வரும் மடாசன் பால்கருக்கு வயது 16. இவர் சற்று உடல் எடையுடன் இருந்தாலும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்துள்ளார். 

பிரிட்டனில், ஈஸ்ட்பெல்பாஸ்ட் பகுதியில் வசித்து வரும் மடாசன் பால்கருக்கு வயது 16. இவர் சற்று உடல் எடையுடன் இருந்தாலும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்துள்ளார்.  

ஆனால் இவருடைய தோழிகள் என்னதான் நீ பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உடல் எடை அதிகமாக இருக்கிறது. முடிந்தால் உடல் எடையை குறைத்துக்கொள் எனஅடிக்கடி சொல்லி கிண்டலும் செய்து வந்துள்ளனர். இதனால் உடல் எடையை குறைக்க தீர்மானித்த இவர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி ஒரு நாளைக்கு ஒரே ஒரு அரை பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு, புளிப்பு மிட்டாய்களை சாப்பிட்டும் வந்துள்ளார். இவ்வாறு டயட் மெயின்டெயின் செய்து வந்ததால் மெல்ல மெல்ல உடல் எடை குறைய தொடங்கியுள்ளது. பின்னர் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். ஏன் இந்த அளவிற்கு எடை குறைந்து விட்டது என ஒரு கட்டத்தில் பயந்த அவர், மருத்துவமனைக்கு சென்று ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்து உள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி ஒருநாள் திடீரென மயக்கம் போட்டு கீழே விழ பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள ஓர் அதிர்ச்சி விஷயம் தெரிய வந்துள்ளது. 

பின்னர் மிகுந்த கவலையுற்ற அவர், "குண்டாக இருப்பதால் தோழிகள் கிண்டல் செய்தனர் அவர்களுடைய பேச்சைக் கேட்டு நானும் இது போன்று உடல் எடையை குறைக்க.... தேவையில்லாத ஒரு முடிவு எடுத்துவிட்டேன்; இன்று என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தேவையான அளவில் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் போனதால் வந்த பிரச்சனை இது. இதனால் மற்ற உடல் உறுப்புகள் பெருமளவில் பாதித்து உள்ளது. அந்த வகையில் கல்லீரல் பாதித்து உள்ளது. உடல் எடை குறைக்க வேண்டும் என இப்போதைக்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் தேவையில்லாத தவறான முறைகளில் பின்பற்றப்பட்டால் இது போன்ற பெரும் ஆபத்தான விளைவு ஏற்பட நேரிடுகிறது.

எனவே உடல் எடையை குறைக்க குறிப்பிட்ட உணவு முறைகளை மட்டும் தவிர்த்து ஊட்டச்சத்து மிகுந்த அதற்கு சமமான பழ வகைகள், பச்சைக் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது சிறந்தது என்பதை இந்த ஒரு பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்