மாணவர்களுக்கு இனி இங்லீஸ் ஓரு விஷயமே இல்ல..! அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்...!

By ezhil mozhiFirst Published Nov 23, 2019, 1:04 PM IST
Highlights

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். 

மாணவர்களுக்கு இனி இங்லீஸ் ஓரு விஷயமே இல்ல..! அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்...!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் குறிப்பாக நீட் இலவச வகுப்பு, சீருடையில் மாற்றம், பாடப் புத்தகத்தில் மாற்றம், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு, ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு ஆங்கில திறனை மேம்படுத்த வெளிநாடுகளிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

மேலும் பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் வாரம் ஒருநாள் வகுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; மேலும் புதிய நுழைவு வாயில் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை அங்கு துவக்கி வைத்த அமைச்சர் இது ஒரு புதுமையான முயற்சி; அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

click me!