பேராசிரியருக்கு போஸ்ட்மேன் கொண்டுவந்த தபால்..! மீளா துயரத்தில் இருந்தவர் செய்தது என்ன?

By ezhil mozhiFirst Published Mar 7, 2020, 4:59 PM IST
Highlights

மிகவும் வேதனையாய் எப்படியாவது ஒரு முறை அவர் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ஓடோடி சென்று மாலை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே நுழைந்து பார்க்கக்கூட முடியவில்லை. 

பேராசிரியருக்கு போஸ்ட்மேன் கொண்டுவந்த தபால்..! மீளா துயரத்தில் இருந்தவர் செய்தது என்ன? 

மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தபால் போஸ்ட் கொண்டுவந்து கொடுப்பவர் போஸ்ட்மேன் சிதம்பரம். இவர் அன்பழகனின் அண்ணா நகர் வீட்டிலும் சரி, கீழ்ப்பாக்கம் வீட்டில் இருந்தாலும் சரி இரண்டு வீடுகளுக்குமே தபால் கொண்டுவந்து கொடுப்பவர் இவர்தான்.

இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்தபோதுதான் அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரியவந்திருக்கிறது. பின்னர் மிகவும் வேதனையாய் எப்படியாவது ஒரு முறை அவர் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ஓடோடி சென்று மாலை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே நுழைந்து பார்க்கக்கூட முடியவில்லை.

 

தொடர்ந்து காவலர்களிடமும் அனுமதி கேட்டு உள்ளார். அனுமதி மறுக்கப்படவே நீண்ட நேரம் காத்திருந்த அவர் கடைசியில் வேறு வழியில்லாமல் தான் வாங்கி வந்த மாலை மற்றும் கொடுக்க வந்த போஸ்டர் இரண்டையும் அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்துவிட்டு நீங்களே என் சார்பாக அஞ்சலி செலுத்தி விடுங்கள் என தெரிவித்து, அவர் கொண்டுவந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு மனவேதனையுடன் பணிக்கு திரும்பியுள்ளார்.இந்த விஷயம் அங்கிருந்தவர்களை நிகழ்ச்சி அடைய செய்துள்ளது

click me!