பிரதமரை கண் கலங்க வைத்த பெண்..!

By ezhil mozhiFirst Published Mar 7, 2020, 3:16 PM IST
Highlights

கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் மருத்துவரை அணுகி, எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பிரதமரை கண் கலங்க வைத்த பெண்..!  

மக்கள் மருந்தகம் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற நபர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது தீபா ஷா என்ற பெண் தனது வாழ்க்கை சம்பவங்களை பற்றி எடுத்துரைக்கும் போது பிரதமர் மோடியும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.மார்ச் 1ம் தேதி முதல் ஏழாம் தேதியான இன்று வரை ஒரு வாரகாலம் மக்கள் மருந்தக வாரம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த  வகையில் நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்திய மோடி,

கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் மருத்துவரை அணுகி, எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவை இல்லாமல் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துக்கொண்டார். மேலும் கைகுலுக்கி பேசுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை மீண்டும் கடைபிடிப்பது நல்லது என கேட்டுக்கொண்டார்.

மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறுகின்றனர்.இந்தத் திட்டம் சிறந்த, நிலையான, நல்ல வருவாய் கொண்ட வேலைவாய்ப்பு திட்டமாகவும் உள்ளது என தெரிவித்து உள்ளார் மோடி. 

click me!