அயோத்தியில் ராமர் கோவில்..! ராமேஸ்வரத்தில் இனிதே தொடங்கிய பூஜை..!

மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கரில் நிலம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து.


அயோத்தியில் ராமர் கோவில்..! ராமேஸ்வரத்தில் இனிதே தொடங்கிய பூஜை..! 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை 40 நாட்கள் விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 9-ம் தேதி தேதி தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும். கோவில் கட்டுவதை பார்வையிட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும்.

Latest Videos

மேலும், மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கரில் நிலம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து முன்னணியின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்யப்பட்டது. அதாவது கடல் மணலில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து, அந்த மண்ணை எடுத்துக்கொண்டு அயோத்தி வரை மிதிவண்டி பயணத்தை தொடங்கி உள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய உள்ளதாகவும், குறிப்பாக ஓசூர், பெங்களூர், ஹைதராபாத் வழியாக 70 ஆவது நாளில் அயோத்தியை அடைய திட்டமிட்டு உள்ளனர். 

click me!