Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

By Raghupati RFirst Published Jan 8, 2023, 6:27 PM IST
Highlights

வரும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான  நாளாகும்.  மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி,  கொம்புகளுக்கு  அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும்.

இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல்  கால்நடை  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும்.  ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு  விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் விடுமுறை நீள்கிறது. ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளனர். போகி தினத்துக்கு முன்பான 13ம் தேதி விடுமுறை அளித்தால் வெளியூர்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என்றும், காணும் பொங்கலுக்கு அடுத்த நாளான 18ம் தேதி கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!

click me!