
பிரதமர் திட்ட பாலிசி..! மாதம் 112 ரூபாய் கட்டினால் முடிவில்...24 லட்சம் ரூபாய்..!
குடும்பங்கள் நெருக்கடிக்கு ஆளாவது பெரும்பாலும், திடீர் விபத்துகளினால் குடும்ப உறுப்பினர்கள் தவறுவதை கூறலாம்...அவ்வாறு தவறும் போது ஒரு குடும்பத்திற்கு பேருதவியாக இருப்பது எல்ஐசி பாலிசி என்று சொல்லலாம்....
அதில் ஏழ்மை மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவராலும் கட்டக்கூடிய மிக குறைந்த கட்டணத்தில் மிக சிறந்த பாலிசி உள்ளது...
அதனையும் இரு வேறு பாலிசியாக போட்டால் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை பார்க்கலாம்
மாதம் 112 ரூபாய் என்பது..எளிதாக கட்ட முடியும்...முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே...
இன்சூரன்ஸ் பாலிசி
விபத்து பாலிசி ரூ.12 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 2 லட்சம்
இது பிரதமர் திட்ட பாலிசி.அனைத்து வங்கியிலும் உள்ளது
விபத்தில் இறக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும்
வாழ்நாள் பாலிசி ரூ.330 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 2 லட்சம்
இது பிரதமர் திட்ட பாலிசி. அனைத்து வங்கியிலும் உள்ளது
எப்படி இறக்க நேரிட்டாலும் கிடைக்கும் (தற்கொலை தவிர)
விபத்து பாலிசி ரூ.1000 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 20 லட்சம்
எஸ்பிஐ வங்கியில் மட்டும் உள்ளது
விபத்தில் இறந்தால் மட்டுமே கிடைக்கும்
ஆக மொத்தம் ஆண்டுக்கு 12+330+1000 = 1342 (மாதம் ரூ.112) கட்டினால் 24 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கிடைக்கும்
இதையும் குறைக்க விரும்பினால்
விபத்து பாலிசி ரூ.500 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 10 லட்சம்
எஸ்பிஐ வங்கியில் மட்டும் உள்ளது
விபத்தில் இறந்தால் மட்டுமே கிடைக்கும்
மொத்தம் ஆண்டுக்கு 12+330+500 = 842 (மாதம் ரூ.70) கட்டினால் 14 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கிடைக்கும்
விபத்து பாலிசி ரூ.200 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 4 லட்சம்
எஸ்பிஐ வங்கியில் மட்டும் உள்ளது
விபத்தில் இறந்தால் மட்டுமே கிடைக்கும்
மொத்தம் ஆண்டுக்கு 12+330+200 = 542 (மாதம் ரூ.45) கட்டினால் 8 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கிடைக்கும்
விபத்து பாலிசி ரூ.100 (1 ஆண்டுக்கு)
கிடைக்கும் தொகை 2 லட்சம்
எஸ்பிஐ வங்கியில் மட்டும் உள்ளது
விபத்தில் இறந்தால் மட்டுமே கிடைக்கும்
மொத்தம் ஆண்டுக்கு 12+330+100 = 442 (மாதம் ரூ.37) கட்டினால் 6 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கிடைக்கும்.
இந்த விவரத்தை அடிப்படையாக கொண்டு அருகில் உள்ள கிளைகளை அணுகி,நல்ல திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.