
என்ன நடக்கிறது..? எடப்பாடிக்கு போன் செய்த பிரதமர் மோடி.! முழு நம்பிக்கையோடு ட்விட்டர் பதிவு..!
குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டறிந்து உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை பதிவு செய்துள்ளார்.
அதில், "குழந்தை சுர்ஜித் வில்சன் பத்திரமாக மீட்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.குழந்தையை மீட் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்" என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்க தமிழகம் முழுவதும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் பொதுமக்கள். சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என சிறுவர்கள் முதல் ஒட்டு மொத்த தமிழகமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.