ஞாபகசக்தி, மூட்டு தேய்மானமத்திற்கு பிரண்டை துவையல்.. சுவையாக செய்ய சூப்பர் டிப்ஸ்!!

By Kalai Selvi  |  First Published Feb 19, 2024, 3:01 PM IST

பிரண்டை துவையல் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம். அதுமட்டுமின்றி, உடலை சுறுசுறுப்பாக வைக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை நரம்புகளை பலப்படுத்தவும் இது உதவுகிறது.


இன்றைய காலகட்டத்தில் நாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவில்லை என்றால், உடலில் பல்வேறு உபாதைகள் வரும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் ரத்த சோகை போன்றவை ஆகும். இன்னும்சொல்லப்போனால், தற்போது பலருக்கு இளம் வயதிலேயே இந்தமாதிரி நோய்கள் தாக்குகிறது. அதுமட்டுமின்றி இப்போது எல்லாம் சிறு குழந்தைகளுக்கு கூட மூட்டு தேய்மான மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு கால்சியம் குறைபாடே முக்கிய காரணமாகும். எனவே, இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் வாரம் இரண்டு முறையாவது பிரண்டை துவையல் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

இதையும் படிங்க:  ப்ரேக்பாஸ்ட்க்கு ஹெல்த்தியான பிரண்டை தோசை சாப்பிடுங்க!

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
நல்லெண்ணை - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு - புளி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

இதையும் படிங்க:  மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க! பிரண்டையை எவ்வாறு பயன்படுத்தணும் தெரியுமா?

செய்முறை:

  • பிரண்டைத் துவையல் செய்ய, முதலில் பிரண்டையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் எடுத்து வைத்த பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பிரண்டையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இவை எல்லாம் நன்கு ஆரியதும் அவற்றை மிக்ஸியில் போட்டு, அதனுடன் தேங்காய் துருவல், உப்பு புளிக்கரைசல் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு அரைத்த அந்த கலவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கடுகு, கருவேப்பில்லை தாளித்து சேர்க்க வேண்டும்.
  • இப்போது சுவையான மற்றும் சத்தான பிரண்டை துவையல் ரெடி! இந்த பிரண்டை துவையலை நீங்கள் இட்லி, தோசை, சூடான சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பின்குறிப்பு:  நீங்கள் பிரண்டையை சுத்தம் செய்யும் போது, உங்கள் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். ஏனெனில் இல்லையென்றால், கையில் விறுவிறுப்பாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!