2 புறாக்கள் விமானத்திற்குள் புகுந்து ஊழியர்களையும்,பயணிகளையும் சடுகுடு ஆடவைத்த காட்சியை பயணிகள் வீடியோ எடுத்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் புறா வெளியேற்றப்பட்டது.
T.Balamurukan
2 புறாக்கள் விமானத்திற்குள் புகுந்து ஊழியர்களையும்,பயணிகளையும் சடுகுடு ஆடவைத்த காட்சியை பயணிகள் வீடியோ எடுத்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் புறா வெளியேற்றப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு கோ ஏர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்திற்குள் 2 புறாக்கள் புகுந்திருப்பதை பணியாளர்கள் பார்த்திருக்கிறார்கள். அதனைப் பிடிக்கும் முயற்சியில் பயணிகளும், ஊழியர்களும் ஈடுபட்டாலும் அவர்களை சடுகுடு விளையாட்டு விளையாட வைத்தது புறா.
புறாக்களை பிடிக்க முடியாமல் பணியாளர்கள் திணறியதை பயணிகள் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் விமானத்தின் கதவுகள் வழியே புறாக்கள் பறந்து சென்றது.விமானம்,புறாக்கள் செய்த சேட்டையால் ஜெய்ப்பூருக்கு அரைமணிநேரம் தாமதமாக சென்றது. இதனால் ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கோ ஏர் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விமானத்திற்குள் புறா எப்படி சென்றது,என்று விசாரணை நடத்தி வருகின்றது கோ ஏர் விமான நிர்வாகம்.