கொரோனா எதிரொலி..! ஈரானில் இருந்து 300 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கை..!

By ezhil mozhiFirst Published Feb 28, 2020, 6:01 PM IST
Highlights

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி..! ஈரானில் இருந்து 300 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கை..! 

300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகின் பல்வேறு நாடுகளில் படுவேகமாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் பரவுவதை தடுக்கவும், அந்தந்த நாடு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள மீன்பிடித்தொழில் செய்துவந்த தமிழக மீனவர்கள் மீண்டும் இந்தியா வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!