வரும் 6,7 ஆம் தேதி ஆபத்தான நாள்..! மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

By ezhil mozhiFirst Published Mar 4, 2019, 2:46 PM IST
Highlights

கோடை காலம் தொடங்கி விட்டது ... இப்போதே வெயில் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது என மக்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.

வரும் 6,7 ஆம் தேதி ஆபத்தான நாள்..! மக்கள் செய்ய வேண்டியது என்ன..? 

கோடை காலம் தொடங்கி விட்டது.. இப்போதே வெயில் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது என  மக்கள் புலம்ப தொடங்கி விட்டனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும்  வெப்பத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் வெப்ப மையமாதலை தடுக்க வேண்டும் என்பதற்காக தான்.. மரம் வளர்ப்போம் என விழிப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த ஒரு வார காலமாக  அவ்வப்போது, சற்று குறைவான வெயில் மற்றும் சில நேரத்தில் லேசான மழை, சென்னையில் வானம் மேக மூடத்துடன் காணப்பட்ட இரண்டு நாட்களில் சற்று மிதமான வெயில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,11 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7 ஆம் ‌தேதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் படி,வேலூர்,திருவண்ணாமலை,கரூர்,கோவை,ஈரோடு,திண்டுக்கல்,திருப்பூர்தர்மபுரி,கிருஷ்ணகிரி,திண்டுக்கல்,நாமக்கல்,சேலம் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் உள் ‌தமிழகத்தில் இயல்பை விட ‌2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் ‌என‌ தகவல் வெளியாகி உள்ளது. 

எனவே இந்த குறிப்பிட்ட நாட்களில் மக்கள் வெளியில் செல்லும் போதோ அல்லது வீட்டிலேயே இருந்தாலும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மோர்,தயிர், பழைய சாதம், இளநீர் என உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது 

அதே போன்று வெளியில் செல்லும் போது, குடை மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் உடன் எடுத்து செல்வது நல்லது.
 

click me!