யூட்யூபில் திரெளபதி வெளியிட்டால் ஒவ்வொருவரும் ரூ.500 தர தயார்..! இயக்குனருக்கு பெருகும் பேராதரவு..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 08, 2020, 06:37 PM IST
யூட்யூபில் திரெளபதி வெளியிட்டால் ஒவ்வொருவரும் ரூ.500 தர தயார்..! இயக்குனருக்கு பெருகும் பேராதரவு..!

சுருக்கம்

சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

யூட்யூபில் திரெளபதி வெளியிட்டால் ஒவ்வொருவரும் ரூ.500 தர தயார்..! இயக்குனருக்கு பெருகும் பேராதரவு..! 

சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி எனவும் சொல்லி போஸ்டர் வெளியான போதே திரெளபதி பரபரப்பை கிளப்பப்போவது உறுதி எனமுடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் வந்தது. 

இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் தியேட்டரில் படம் வெளியிட தடை வந்தால், யூட்யூபில்வெளியிடுவோம் என அதிரடி கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் திரெளபதி படத்திற்கு பெருமளவு ஆதரவு இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த பட குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது.  எனவே இந்த படம் வெளியானால் வெற்றி பெரும் என்பதால் எந்த மாற்றமும் கிடையாது. 

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகும் முதல் படம் இதுவாகும். தனது முதல் படமான அட்டக்கத்தி படத்திலிருந்து மெட்ராஸ், கபாலி, காலா என தான் இயக்கிய படங்களில் ஒரு தலைசார்பான சமூகத்தை திணித்திருந்தார் பா.ரஞ்சித். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக திரெளபதி படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகனுக்கு ஆதரவாக பல்வேறு நபர்கள் சிலர் போஸ்டர் வெளியிட்டு வருகின்றனர். மேலும் மீம்ஸ் உருவாக்கியும் பதிவிட்டு வருகின்றனர் அதில் "எங்கள் பெண் தெய்வம் திரௌபதியின் புதல்வனே... திரு. ஜி.மோகன் அவர்களே..! நீங்கள் திரௌபதி படத்தை யூடியூபில் வெளியிடுவதாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு எண்ணையும் சேர்த்து வெளியிடுங்கள். நாங்கள் ஒவ்வொருவரும் ரூபாய் 500 அனுப்ப தயாராக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் திரௌபதி படத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் மத்தியில் பேராதரவு கிளம்பி இருக்கிறது என்பதை மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!