ரேஷன் கடையில் அலைமோதும் பொதுமக்கள்..! அட.. ஊர் கிராமத்தில் இல்லைங்க... சென்னை கோடம்பாக்கத்தில்.!

By thenmozhi gFirst Published Jan 9, 2019, 1:46 PM IST
Highlights

பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இப்பொழுதே தமிழக மக்கள் பொங்கலை கொண்டாட உற்சாகமாகி வருகின்றனர்.

ரேஷன் கடையில் அலைமோதும் பொதுமக்கள்..!

பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இப்பொழுதே தமிழக மக்கள் பொங்கலை கொண்டாட உற்சாகமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது பொங்கலுக்கு ஆறு நாட்கள் விடுமுறை என்பதே. இதன் காரணமாக வெளி மாநிலம் வெளி ஊரில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பெரும் ஆவல் காட்டி வருகின்றனர்.

அதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்துவிட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தமிழக அரசால் 6 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடையே மேலும் ஒரு புது உற்சாகத்தை பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூபாய் 1000 மற்றும் அரிசி பருப்பு சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை ஆகியவற்றை கொடுக்கப்படுகிறது.

இதனை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. சரி கிராமங்களில்தான் இந்த அளவிற்கு ஒரு உற்சாகமாக பொங்கலை வரவேற்பார்கள் என பார்த்தால்,சென்னையிலும்  மக்கள் மத்தியில் ஒரு விதமான உற்சாகம்  காணப்படுகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 4 ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு சார்பாக வழங்க உள்ள பொங்கல் பரிசு பெறுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக கியூவில் நின்று கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள். இந்த வாரத்தில் சற்று வெயில் அதிகமாக  காணப்படுவது இன்றுதான். இருந்தபோதிலும் இந்த வெயிலை ஒரு பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கி செல்ல காத்திருக்கின்றனர் பொதுமக்கள். 

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் மிக சிறப்பாக அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் பொங்கல் பரிசு மட்டுமே அல்ல அதையும் தாண்டி 6 நாள் விடுமுறை என்பது கூடுதல் சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!