சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு குறிப்பிட்ட பணி நேரம் வரையறுக்கப்பட்டு உள்ளதால் பெண் போலீசார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெண் காவலருக்கு இனி நைட் டியூட்டி கிடையது...!
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு குறிப்பிட்ட பணி நேரம் வரையறுக்கப்பட்டு உள்ளதால் பெண் போலீசார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதன்படி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெண் போலீசார் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.
அதேவேளையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நேரத்திலும் அவசர காலங்களிலும் இந்த நேரம் இருக்காது என்றும், அந்த குறிப்பிட்ட நாளில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல பெண் போலீசார் காவல் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மத்திய குற்றப் பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு மட்டும்தான் இந்த பணி நேரம் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெண் போலீசாரின் பணிநேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என பெண் போலீஸ் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை மனு வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.