எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..!

By ezhil mozhiFirst Published Dec 9, 2019, 7:22 PM IST
Highlights

30 டன் வெங்காயம் திருச்சிக்கு காந்தி நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்யவும், அவ்வாறு வினியோகம் செய்த பின்னர் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 120 வரை நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..!  

வெங்காயம் கட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தொடர் விலை ஏற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர்.

மேலும் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பல்வேறு கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த ஒரு நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் நிலைமையை சமாளிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தற்போது எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

30 டன் வெங்காயம் திருச்சிக்கு காந்தி நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்யவும், அவ்வாறு வினியோகம் செய்த பின்னர் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 120 வரை நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 150 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர எகிப்திலிருந்து இறக்குமதி  கொண்டுவரப்பட்ட வெங்காயம் பெரிய அளவிலும், சற்று கருமையாகவும் இருப்பதால் வெங்காயம் வாங்க தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும் விலை அதிகமாக இருந்தாலும் நாட்டு வெங்காயம் தான் வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

click me!